அகில இந்திய விவசாயிகள் கட்சியில் இனியும் சேராதிருப்போர் சேர்க - கமல் ஹாசன்
விக்னேஷ் (Author) Published Date : Nov 14, 2017 18:41 ISTஇந்தியா
சினிமா மற்றும் அரசியலில் தீவிரமாக நடிகர் கமல் ஹாசன் தற்போது ஈடுபட்டுவருகிறார். இவருடைய பிறந்த நாளில் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை விரைவில் தெரிவிப்பேன் என்றும் மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்க்க அதற்கான செயலியையும் அமல்படுத்தினார். இதனை அடுத்து தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
காவிரி மேலாண்மை, விவசாயி கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே நதிநீர் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டங்களை நடத்திவந்தனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விவாசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன்மூலம் தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றதை அடுத்து டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வில்லை.
இதனை அடுத்து குருநாத் கோவில் வளாகத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு அகில இந்தியா விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு உருவானதை தெரிவித்தார். தென்னிந்தியா தலைவராக அய்யாக்கண்ணுவை தேர்வு செய்துள்ளதை அறிவித்தார். இந்த பொதுக்குழுவில் 21 செயலாளர்கள், 150 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த குழுவில் இணையுமாறு கமல் ஹாசன் டிவிட்டரில் "அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்." என்று கருத்து பதிவிட்டுள்ளார்.