ஆசிஃபா பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு
ராசு (Author) Published Date : Apr 13, 2018 12:31 ISTஇந்தியா
8 வயதான காஷ்மீர் சிறுமி ஆசிஃபா ஒரு காட்டுமிராண்டி கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனவரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரணை செய்த SP ரமேஷ் குமார் ஜல்லா, சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தார். மேலும், தன் குற்றப் பத்திரிகையை ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்றம் விதித்த விசாரணைக்கான 90 நாட்கள் காலக்கெடு முடியம் முன்னரே இவர் அறிக்கையை சமர்ப்பித்தார். காஷ்மீர் பண்டிதரான இவர், இது பற்றி கூறுகையில், இந்தக் குற்றத்தில் சம்பத்தப்பட்டவர்கள், ஆசிஃபாவின் இன மக்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவே இதைச் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து, இன்று காலை முதலே, கதுவா, உன்னாவில் நடந்த சம்பவங்களுக்காக பாலிவுட் பிரபலங்கலான அபிஷேக் பச்சன், அணில் கபூர், அக்ஷய் குமார், சோனம் கபூர், அலியா பட், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கடும் கண்டனத்தையும், மிகுந்த வருத்தத்தையும், ஆழ்ந்த இறங்கல்களையும் தங்கள் ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ் நடிகர்களான கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும் சிறுமிக்கு நேர்ந்த துயரம் குறித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதில் கமல்ஹாசன், நாங்கள் உன்னைக் காக்கத் தவறிவிட்டோம். மன்னித்து விடு. இனி உன் போன்ற பிள்ளைகளுக்கு இது மாதிரியான நிகழ்வு ஏற்படாமல் இருக்க நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், பிரகாஷ்ராஜ், ஒரு தந்தையாக தந்தையாக இதயத்தில் வலியை உணர்கிறேன். இன்னும் எதனைக் கொடுமைகளை சகித்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோரினார்.