தொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை
வேலுசாமி (Author) Published Date : Aug 17, 2018 10:31 ISTஇந்தியா
கேரளா மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அதிகரித்து வரும் கனமழையால் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அணையின் உபரி நீர் வெளியேறி அனைத்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இதனால் தற்போது லட்சக்கணக்கான பொது மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை அதிகரித்து கொண்டே வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு ரத்து செய்யப்பட்ட தேர்வு தேதிகள் குறித்து அறிவிக்கப்படும் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தொடர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இது தவிர தற்போது வரை வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியுள்ளது. இதனால் மீட்பு பணிகளை விரைவுபடுத்த தேசிய பேரிடர் குழுவினர் திருவனந்தபுரம் நோக்கி விரைந்துள்ளனர்.