120 அடியை இரண்டாவது முறையாக எட்டிய மேட்டூர் அணை - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராசு (Author) Published Date : Aug 11, 2018 15:51 ISTஇந்தியா
தற்போது மலைப்பிரதேசமான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 50ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இது தவிர ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்ப்பட்ட சாலைகளும் வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளது. தற்போது வரை கேரளாவில் 30பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணை தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 40வது முறையாக நிரம்பியுள்ளது.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கிருஷ்ணா ராஜசேகர் அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. தற்போது தமிழகத்திற்கு கபினி மற்றும் கிருஷ்ண ராஜசேகர் அணையில் இருந்து 1,42,319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தண்ணீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. இதனால் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது நீர் இருப்பு 1,20,000 கனஅடியாக உள்ள நிலையில் மாலைக்குள் 1,30,000கனஅடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.