இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் மறைந்த தினம் - பிரதமர் மோடி இரங்கல்
விக்னேஷ் (Author) Published Date : Dec 15, 2017 14:33 ISTஇந்தியா
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் மறைந்த தினம். இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய விடுதலை போராட்ட தலைவர்களுள் ஒருவர் ஆவார்.குஜராத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஆங்கிலேயருக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கியமானவராக திகழ்ந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
500 கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியுள்ளார். இவர் தன்னுடைய 75 வது வயதில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 1 -இல் இயற்கை எய்தினார். அவருடைய நினைவு தினமான இன்று பல்வேறு பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது இரங்கலை செலுத்தி வருகின்றனர். தற்போது பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் "இன்று அனைவரும் சர்தார் வல்லபாய் படேலின் மறைந்த தினத்தை நினைவு கூர்வோம். அனைத்து இந்தியர்களும் அவருக்கு கடமை பட்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.