Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் அயராது உழைத்தும் அவர்களால் தேர்ச்சி அடைய முடிவதில்லை. முன்னதாக நீட் தேர்வினால் மருத்துவ கனவு பறிபோனாதாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதனை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இனிமேல் எந்த உயிரும் பறிபோக கூடாது என்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தும் அது பயனளிக்காமல் போனது. இந்நிலையில் மாணவர்களுக்கு வரும் மே 6-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த தேர்விற்காக மாணவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுதும் கட்டாயம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான மாணவர்களுக்கு கேரளாவில் எர்ணாகுளம் மற்றும் பத்தினம் திட்டா என்ற பகுதியிலும் மற்றும் பல மாணவர்களுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு பொது மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் மத்திய அரசின் மாறான முடிவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக மாறியுள்ளது.

தற்போதைய இந்த சூழலுக்கும் போராட்டங்கள் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு மாறாக  வெளிமாநிலங்களில் தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு உதவ பல தமிழ் சங்கங்கள் உதவ முன்வந்துள்ளது. இது தவிர ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், வாகன வசதி போன்றவற்றை செய்ய ராஜஸ்தான் தமிழ் சங்கம் உதவ முன்வந்துள்ளது. ராஜஸ்தான் செல்லும் மாணவர்கள் இந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. திரு. முருகானந்தம் - 9790783187திருமதி. சௌந்தரவல்லி  - 8696922117திரு.பாரதி - 7357023549

மேலும் கேரளா செல்லும் மாணவ மாணவியர்களுக்கு உதவும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் உதவ முன்வந்துள்ளார்.  மேலும் புனேவில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் விஜய் சோலை சாமி என்பவர் கேரளா மற்றும் ராஜஸ்தான் செல்லும் 20 மாணவ மாணவியர்களுக்கு ரயில் பயண சீட்டு, விமான பயண சீட்டு வாங்கி தர முன்வந்துள்ளார். இவருடைய அலைபேசி எண் -+91 8220092777 இவருடைய இமெயில் முகவரி : viji_@yahoo.com

நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்