Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தேசிய கீதம் திரையரங்கில் காண்பிப்பது கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம்

supreme court new order for national anthem

நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் ஒளிபரப்ப செய்யவேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேசிய கீதம் இசைக்க படும்போது கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.  இதற்கான வழிமுறைகளை அமைச்சரவை குழு நிர்ணயிக்கும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவில் வழிமுறைகளை உருவாக்க அமைச்சரவை குழு அமைத்து நிர்ணய படுத்த குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்பதால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்க பட்டுள்ளது. 

இன்று இந்த மனுவின் மீதான விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் தேசிய கோடி, சின்னங்கள் அவமதிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை குழு நெறிமுறைகளை வகுக்கும் வரை தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. இதனை அடுத்து நீதிபதி அளித்த உத்தரவில் "தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. எங்கெல்லாம் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யவேண்டும். மத்திய அமைச்சரவை குழு இது தொடர்பாக வரையறுக்க வேண்டும்" என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய கீதம் திரையரங்கில் காண்பிப்பது கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம்