2018 முதல் விமான டிக்கெட்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும்
விக்னேஷ் (Author) Published Date : Nov 22, 2017 19:45 ISTஇந்தியா
இனிமேல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவின்போது கட்டாயமாக ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018 முதல் அமலுக்கு வரவுள்ளது. இது குறித்து விமான கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் "வரும் 2018 முதல் கொல்கத்தா, அகமதாபாத், விஜயவாடா தவிர மற்ற விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைக்க வேண்டும், ஆதார் அடிப்படையில் கொண்டு வரப்படவுள்ள இந்த திட்டத்தினால், பயணிகள் விமான நிலையத்தில் நுழையும்போது அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறையில் சோதனை நடத்தப்படும்.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பயணி இதற்குமுன் எங்கு சென்றுள்ளார், எங்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார் போன்ற தகவல்களை பெற முடியும். மேலும் பரிசோதனையின் போதே அவரை பற்றிய முழு தகவல்களும் தெரிந்து விடும். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் அடையாள அட்டை, போர்டிங் டிக்கெட், பேப்பர் டிக்கெட் போன்றவற்றை காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பயணிகளின் நேரமும் மிச்சமாகும். ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான பார்கோடு டிக்கெட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும்." என தெரிவித்துள்ளது.