Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சென்னை மெரினா கடற்கரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி

பொது மக்களின் வசதிகளுக்காக மெரினா கடற்கரையை மேம்படுத்த உள்ளனர்.

உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றாக மெரினா கடற்கரை விளங்குகிறது. 13கிமீ நீளம் கொண்ட மெரினா கடற்கரை சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்து சென்னையின் முக்கியமாக அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. மெரினா கடற்கரையில் புகழ்பெற்ற கலைஞர்களின் நினைவிடங்கள், உருவ சிலைகள் மற்றும் சமாதிகள் போன்றவை அமைந்துள்ளதால் சென்னையின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று.

தமிழர்களின் ஒற்றுமையை வியக்கும் வகையில் அமைந்த ஜல்லிக்கட்டு போராட்டமும் மெரினா கடற்கரையில் தான் நடந்தது. இதற்கு பிறகு அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. சென்னையில் மிக முக்கிய கடற்கரையான இந்த பகுதியில் மக்களின் முக்கிய தினங்களாக குடியரசு தின விழா, தீபாவளி, பொங்கல், சுதந்திர தின விழா மற்றும் மாரத்தான் ஓட்ட பந்தையமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த கடற்கரையில் பொது மக்கள் தினந்தோறும் வந்து தங்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், மனதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும், காதலர்களுக்கு முக்கியமான சுற்றுலா தலமாகவும் மெரினா திகழ்கிறது. சிறியவர்கள் முதல் முதியவர் வரை உள்ள, சாமானிய பொது மக்கள், மாபெரும் தொழிலதிபர்கள் ஆகியோர் கண்டு கழிக்கும் இந்த கடற்கரையை தற்போது மேம்படுத்த உள்ளனர். இந்த திட்டத்தில் பல்வேறு வசதிகள் இடம் பெறுகிறது.

அதில் பொது மக்கள் அனைவருக்கும் இலவச வை-பை (Wi-Fi), கடல் அழகை ரசிக்கும் வகையில் பொது மக்கள் அமர ஏராளமான நாற்காலிகள், மருத்துவ வசதி கொண்ட அறைகள், இரவில் மக்களை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்கள் போன்றவை இடம் பெற உள்ளது. பொது மக்களுக்கு வசதிகளுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி துவங்கவுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி