Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் போன்ற நவீன வசதிகள் அறிமுகம்

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது நவீன வசதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டம், வட்டம், ஊராட்சி என பகுதி வாரியாக தனது சேவையினை அளித்து வருகிறது. ஆனால் பெருகி வரும் மக்கள் தொகையினாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று நோய்களாலும் ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனைகளில் சாமானிய மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. தற்போதுள்ள சூழலில் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் மக்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.

ஆனால் சாமானிய மக்களின் நிலைமை அரசு மருத்துவமனை ஒன்று மட்டுமே. தமிழக அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோயம்பத்தூரில் இயங்கி வரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதியதாக ஆஞ்சியோ கிராம் (Cath Lab), அழகியல் துறை (Cosmetology and Cosmetic Surgery), செவி வழி பேச்சு பயிற்சி (Audio Verbal Therapy) மற்றும் கூடுதலான டயாலிசிஸ் பிரிவு போன்ற வசதிகளை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் துவக்க விழா இன்று நடைபெறுகிறது. அதன்படி இன்று நண்பகல் 12:00 மணியளவில் துவக்கவிழா நடைபெறுகிறது. இந்த துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் திரு த.ந.ஹரிஹரன், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் திரு எஸ்.பி வேலுமணி மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் திரு சி.விஜயபாஸ்கர் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

பொது மக்களுக்காக செயல்படும் இந்த அரசு மருத்துவமனையில் தற்போது இதயத்தில் உள்ள அடைப்புகள் குறித்து ஆய்வு செய்யும் ஆஞ்சியோகிராம், மக்களின் அழகுகள் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் அழகியல் துறை சார்ந்த கருவிகள், காத்து கேளாத, செவி திறன் குறைவாக உள்ளவர்கள் போன்றோருக்கு உதவியாக இருக்கும் செவி வழி பேச்சு பயிற்சி மற்றும் மருத்துவமனைகளில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவுகளை மேம்படுத்தியுள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் போன்ற நவீன வசதிகள் அறிமுகம்