உபேர் ஓலா கால் டேக்சி ஓட்டுனர்கள் ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்
வேலுசாமி (Author) Published Date : Mar 16, 2018 16:44 ISTஇந்தியா
மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேருந்துகள், ஆட்டோ, கால் டேக்சி போன்றவை பெரிதும் உதவியாக இருக்கிறது. இதில் பேருந்துகள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் செல்வதற்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் தற்போது அதிகரித்து மக்கள் தொகை காரணமாக பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் தற்போது ஓலா, ஓலா ஆட்டோ, உபேர் போன்ற கால் டேக்சிகளை உபயோகிக்க மக்கள் ஆரம்பித்துவிட்டனர். தற்போது மக்களின் வாழ்க்கையில் ஆண்டிராய்டு போன்ற மொபைல்கள் பெரும் பங்கு வகிப்பதால் அதற்கேற்றவாறு ஒரு செயலியை உருவாக்கி அதன் மூலம் இந்த கால் டேக்சிகளை எளிதாக புக் செய்து மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள் எளிதாக சென்று வருகின்றனர்.
இந்த நடைமுறை மக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால் ஓலா, உபேர் போன்ற கால் டேக்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு இந்த வசதி பயனளிப்பதாக இல்லை. இந்நிலையில் தற்போது ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள் கால் டேக்சி நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் வரும் ஞாயிறு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் புதுடெல்லி, மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரு போன்ற இதர மாநகரங்களிலிலும் நடைபெறும் என்று ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து கால் டேக்சி ஓட்டுநர் சங்க தலைவர் சஞ்சய் நாயக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "எங்களிடம் மாதந்தோறும் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என வாக்குறுதி கொடுத்து ஓலா, உபேர் போன்ற கால் டேக்சி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன.
இதனை நம்பி நாங்களும் 5-7 லட்சம் வரை வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். ஆனால் இந்த தொகையில் பாதியளவை கூட தற்போது எங்களுடைய சம்பாதித்யம் எட்டவில்லை. அனைத்தையும் அந்நிறுவனங்களே சம்பாதித்து விட்டால் நாங்கள் எப்படி சம்பாதிப்பது. காரின் சொந்த ஓட்டுனரையும் வெவ்வேறு விதமாக நடத்துகின்றனர். முத்ரா என்ற திட்டத்தின் மூலம் வாக்குறுதி கடிதம் அளித்து எங்களுக்கு கடன் வாங்கி தந்தது.
அதிலும் செலுத்த வேண்டிய தொகை உள்ளது. அந்த தொகையை தற்போதுவரை திருப்பி செலுத்தவில்லை. இதனால் எங்கள் காருக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் எங்களது கார்களை பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் எங்களுக்கு ஒரு தீர்மானம் வரும் வரை கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். போக்குவரத்துக்கு துறை அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபடும் கால் டேக்சி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.