23 ஆண்டுகளுக்கு பிறகு புழக்கத்தில் வந்துள்ள ஒரு ரூபாய் நோட்டு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 10, 2018 21:10 ISTஇந்தியா
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு புதிய 2000, 1000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. இந்த புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி புது புது வண்ணத்தில் அச்சடித்திருந்தது. இதனை அடுத்து புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. தற்போது இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த ஒரு ரூபாய் நோட்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை ஓத்திருந்தாலும் அதில் சில மாற்றங்களை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் 10 ரூபாய் முதல் அதற்கு மேல் உள்ள நோட்டுகளில் ஆளுநரின் கையொப்பம் இடப்பெறும். ஆனால் ஒரு ரூபாய் நோட்டை இந்திய அரசு நேரடியாக வெளியிடும். இந்த ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையொப்பம் இடம்பெறும். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையொப்பம் இடப்பெற்றுள்ளது. இந்த நோட்டில் 2017-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ரூபாய் நோட்டு 1994-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து புதிய ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்துள்ளது.