தமிழகத்தின் 2794 தேர்வு மையங்களில் ப்ளஸ் 2 தேர்வு தொடங்கியது
விக்னேஷ் (Author) Published Date : Mar 01, 2018 12:02 ISTஇந்தியா
தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று +12 மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 9,07,620 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கபட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவ மாணவியரை கண்காணிக்க 95,000 அரசு பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு வரும் போதுதான் கடவுள் கண்களுக்கு தெரிவார். அதன்படி இன்று காலையிலே மாணவ மனைவியர்கள் கோவிலுக்கு சென்று படித்த கேள்வியே வரவேண்டும், வர ஆசிரியர் நல்லவராக இருக்க வேண்டும், கேள்விகள் கஷ்டமாக இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டி வழிபட்டுள்ளனர்.
இதன் பிறகு காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்து உரிய ஆசிரியர்களிடம் அறிவுரைகளை பெற்று தேர்வு அறைகளுக்குள் 10 மணிக்கு நுழைந்தனர். இந்த தேர்வானது 3:15 மணி நேரம் நடைபெறுகிறது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை சரிபார்க்கவும், படிக்கவும் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது, அருகில் உள்ள மாணவர்களிடம் விடையை கேட்பது போன்ற செயல்களை தவிர்க்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கபட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் தேர்வு மையங்களில் மொபைல் போன் எடுத்துவர ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 103 ஆண் சிறை கைதிகளும் தேர்வு எழுத புழல் சிறை அமைக்கப்பட்டு அதில் தேர்வு எழுதி வருகின்றனர்.
+12 மாணவர்களுக்கு நடைபெறும் இந்த தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் இன்று தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு நடிகர்கள் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.