ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பாமக தொண்டர் பலி
ராசு (Author) Published Date : Apr 11, 2018 14:16 ISTஇந்தியா
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் மத்திய அரசைடக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில தொண்டர்கள் ரயிலின் மேல் ஏறி முழக்கங்கள் எழுப்பினர். அதில், தொண்டர் ஒருவரின் தலை மின்சாரக் கம்பியின் மீது படவே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். பின் போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதட்டமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்தை பாமக இன்று நடத்துகிறது. இத ஆதரித்து பல மாவட்டங்களில் பெருவாரியான கடைகள் மூடியுள்ள. நூற்றுக்கும் மேற்பட்ட பாமக தொண்டர்கள் திருச்சி ரயில் நிலையம், நாமக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, திண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடந்தது. அப்போதுதான், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த துயர நிகழ்வு நடந்தது.