Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரதமர் மோடி தலைமையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

modi arrives kanyakumari

ஒக்கி புயல் பாதிப்பினால் பல மீனவர்கள் உயிரிழப்பிறகு ஆளாகியுள்ளனர். இதன் காரணத்தினால் அரசாங்கத்துறையினர்  மீட்பு பணிகளை அதிகப்படுத்தி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருகிற 22ம் தேதிக்குள் ஒக்கி புயலால் காணாமல் போன 551 மீனவர்களை மீட்பது குறித்து மத்திய மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை மதுரை கிளை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

 இந்நிலையில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேரில் இன்று வந்துள்ளார். மேலும் இந்த பாதிப்பை குறித்து பிரதமர்  தலைமையில் இன்று கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை ஒன்று நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து பல உரையாடல்கள் நடைபெற்றது.அதன் பிறகு பிரதமரிடம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிப்பிற்கு நீதி ரூ.4,047 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.     

பிரதமர் மோடி தலைமையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.