கோவிட்-19 நோயாளிகளுக்காக ரஜினிகாந்தின் ராகவேந்திர மண்டபம்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 09, 2020 21:39 ISTஇந்தியா
தமிழக சுகாதார அமைச்சகம் தனது தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் செய்து வருகிறது. மேலும் பல தன்னார்வலர்களுடன், பல உயர் சினிமா பிரபலங்களும் அரசாங்கத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.
சமீபத்திய செய்தியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ராகவேந்திர திருமண மண்டபத்தை தமிழக அரசுக்கு கோவிட்-19 நோயாளிகளுக்காக கொடுக்க முன்வந்துள்ளார்.
அண்மையில், கமல்ஹாசன் மற்றும் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது வீடுகளை கோவிட்-19 நோயாளிகளுக்காக அரசுக்கு வழங்கியுள்ளனர். இப்போது, ரஜினிகாந்த் தனது தாராள மனப்பான்மையைக் காட்டியுள்ளார்.
மாநிலத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா, தல அஜித் ஆகியோர் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளனர். மற்ற நடிகர்கள் செய்யாத ஒன்றை தல அஜித் பிரதமர், முதல்வர் மற்றும் FEFSI அமைப்பிற்கு நிவாரண நிதியாக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
ராகவேந்திர திருமண மண்டபம் நகரின் மையத்தில் உள்ளது, மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு அந்த இடத்தில் தங்குவதற்கான ரஜினியின் திட்டம் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக இருக்கும்.