சிறுமிகள் பலாத்கார வழக்கு வேதனையில் கமல்ஹாசன் ராகுல்காந்தி
ராசு (Author) Published Date : Apr 13, 2018 10:41 ISTஇந்தியா
மூன்று மாதங்களுக்கு முன், காஷ்மீர் மாநிலம் கத்துவாவில், ஆசிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதே போல், சென்ற வருடம், உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில், மைனர் பெண் ஒருவர் பாஜக MLAவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் பேசப்பட்டது. இது தொடர்பாக, காவல் துறையில் புகார் அளித்த அவரின் தந்தையையும் அந்த மாலாவின் தம்பி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த இரு வழக்குகளிலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற மத்திய அரசு நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நள்ளிரவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இருவருக்கும் நீதி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தி டில்லியில் இந்தியா கேட் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, குளம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இது தன ட்விட்டரில் கூறுகையில், இந்த தேசம் பெண்களுக்கான பாதுகாப்பில் பின்தங்கியுள்ளது. எனினும், அந்த இரு மகள்களுக்கான நீதி கிடைக்கும் வரை நிச்சயமாக போராடுவோம் என்றார்.
கடந்த சில வருடங்களாகவே, இந்தியாவில், பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மத்திய அரசும், பேடி பாசோ பேடி படோ உட்பட பல சட்டங்களை இயற்றினாலும் கூட, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.