தமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்
ராசு (Author) Published Date : Jul 12, 2018 14:40 ISTஇந்தியா
தமிழகத்தில் இன்றும் போக்குவரத்துக்கு விதிமுறைகளை பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பது குறைவு. சாலைகளில் இரு சக்கரவாகனகள் வேகமாக செல்வதும், மற்ற ஒழுங்காக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்வது இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் சாலை விபத்துகளை அவரவர் வாழ்க்கையில் நடக்கும் வரை பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்பது வருத்தமாக உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக கோயம்பத்தூரில் தொடர் மழையால் சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் காந்திபுரத்தில் இருந்து அவிநாசி ரோடிட்டிற்கு செல்லவேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி, மிகுந்த காலதாமதத்துடன் செல்ல வேண்டி இருந்தது. இந்த செய்தி பதிவிட காரணம், வீடியோவை அனுப்பியவர் கூறியது, நீண்ட நேரம் எனது வண்டியின் பின்புறம் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது குறைந்தது ஐந்து நிமிடமாவது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பின் தான் செல்ல முடிந்தது.
இது மிகவும் வேதனையான விசயமாக இருப்பதற்கு காரணம், சில உயிர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக செல்வதனால் போகும் வழியிலே சிலர் உயிரிழக்கின்றனர். நாம் கடைபிடிக்கும் சிறிய போக்குவரத்து நடை முறையில் சில உயிர்களை காப்பாற்றமுடியும் என அனைவரும் உணரவேண்டும்.