இன்று முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை 25 ரூபாய்
வேலுசாமி (Author) Published Date : Nov 01, 2017 11:20 ISTஇந்தியா
நாட்டை பரபரப்புக்கு உள்ளாகிய இந்த சர்க்கரை விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இனி சாதாரண அட்டைதாரர்களுக்கு சர்க்கரை விலை 25 ரூபாய், அந்தியோதைய அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் வரும் வறுமை கோட்டுக்கு கீழ் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாற்றம் ஏதும் இல்லாமல் 13.50 ரூபாய்க்கும் மேலும் காவல் அட்டைதாரர்களுக்கு 12.50 ரூபாயும் இன்று முதல் விற்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்துளளார். மேலும் அவர் ரேஷன் கடைகளில் பிரச்சனை ஏற்படாதிருக்க கடைகளில் உள்ள "பாயிண்ட் ஆப் சேல்" என்ற கருவியில் விலை ஏற்றத்தை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்க்கரை விலை இருமடங்காக உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர்களிடம் கேட்டபோது அரசின் இந்த திட்டத்தினால் மக்களுக்கு எந்த பாதிப்பு வராது எனவும் 2013-ஆம் ஆண்டு இது குறித்து பேசப்பட்டபோது ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை எதிர்ப்பது ஏன் என சமாளித்து வருகின்றனர். மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட அரசாங்கம் தற்போது மக்களை கவனிப்பதில்லை என்று பலதரப்பினரிடம் எதிர்ப்பு வலுக்கிறது.