14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ்
வேலுசாமி (Author) Published Date : Jun 04, 2018 11:45 ISTஇந்தியா
இன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், திருவனந்தபுரத்தில் IFC 31 என்ற விமானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை புறப்பட்டார். இவருடைய விமானம் சரியாக 2 மணியளவில் திருவானந்தராபுரத்தில் இருந்து புறப்பட்டது.
இவர் புறப்பட்ட 2:44 மணி நேரத்தில், அதாவது மாலை 4:44 மணிமுதல் 4:58 மணி வரை 14 நிமிடங்கள் இவருடைய விமானத்திற்கு விமான கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே உள்ள தொடர்பு எதிர்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு ஏற்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்த வந்தனர்.
பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்ட 14 நிமிடங்கள் கழித்து மொரிசியஸ் விமான நிலையத்துடன் தொடர்பு கிடைத்தது. இதன் பிறகு மொரிசியஸ் விமான நிலையத்தில் சூழ்நிலை மோசமானதாக உள்ளதாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி விமானம் தரையிறக்க பட்டுளள்து. இந்த தகவலை தற்போது ஏர் இந்தியா கட்டுப்பாட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.