Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஊரடங்கு தொடரும்

கோவை போலீஸ் கண்காணிப்பில், சமூக தூரத்தை கடைபிடித்த மக்கள்

இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியீட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம், சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று 29-ஏப்ரல்-2020 புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26-ஏப்ரல்-2020 முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.

எனினும், 30-ஏப்ரல்-2020, வியாழக்கிழமை அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு, அதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் திறந்திருக்கு அனுமதிக்கப்படும்.

1-மே-2020 வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஊரடங்கு தொடரும்