வணிகர் சங்கம் திட்டமிட்டபடி ஏப்ரல் 3ஆம் தேதி கடையடைப்பு
ராசு (Author) Published Date : Apr 01, 2018 20:06 ISTஇந்தியா
திமுக மற்றும் இதர கட்சிகள் இன்று தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்துவதை குறித்து ஆலோசித்தனர். நடந்து முடிந்த கூட்டத்தில், அனைவரும் ஒருமித்த கருத்தாக எதிர்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், இன்று இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத மற்ற கட்சிகள், மாணவ அமைப்பினர், தொழில்சங்க அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொது மக்களும் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் தேதி மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் ஏப்ரல் 5ஆம் தகுந்த நாளாக இருக்கும் என்றார்.
ஏற்கனவே வணிகர் சங்கத்தின் சார்பாக ஏப்ரல் 3ஆம் தேதி முழு கடை அடைப்பு மற்றும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி வருவதால் கறுப்புக்கொடி காண்பிக்கும் போராட்டத்தினை அறிவித்திருந்தனர். இந்நிலையில் திரு ஸ்டாலின் அவர்களின் போராட்ட தேதிக்கு பதிலளிக்கும் வகையில், போராட்ட தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை, நாங்கள் அரசியல் கட்சிகளிடும் சேர்ந்த நடத்தவில்லை என்றும், மக்கள் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கிக்கொள்ளுமாறும், பால் மற்றும் செய்தி தாள்கள் வழக்கம் போல் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு வெள்ளையன் அவர்கள் தெரிவித்தார். மேலும் கூறுகையில், இந்த கடை அடைப்பு போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததிற்கு மட்டுமில்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ திட்டத்திற்காக மத்திய அரசை கண்டித்து நடத்துவதாக கூறினார்.