விபத்தில் உயிர் தப்பிய நபர் டாட்டா டியாகோ நிறுவனத்திற்கு நன்றி
வேலுசாமி (Author) Published Date : Apr 04, 2018 12:09 ISTஇந்தியா
நான்கு சக்கர வாகனங்கள் சந்தையில் பல்வேறு வகைகளாக கிடைக்கிறது. இதில் மக்களின் வரவேற்பை பொறுத்து கார் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்திலும் புதிய வகை கார்களை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து கார் நிறுவனங்களும் ஒரே மாதிரியான தரத்தில் கார்களை வெளியிடுவதில்லை. பல வகையான கார்களில் குறைபாடுகளும், நலனும் இருக்கின்றது. ஆனால் இதில் மக்கள் நலனை மட்டும் பார்த்து கார்களை வாங்குகின்றனர்.
இதனால் சாலைகளில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளில் காரின் உள்ளே பயனாளர்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் கார் நிறுவனங்கள் தக்க பாதுகாப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும். இதனால் சாலை விபத்துகளில் இருந்து உயிர்பிழைத்தோர் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் டிராக்டருடன் டாட்டா டியாகோ காரும் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் காரும் டிராக்டரும் நேர் எதிராக மோதிக்கொண்டதால் டிராக்டர் இரண்டாக பிளந்துள்ளது. ஆனால் டாட்டா டியாகோ காரும் இரண்டு மூன்று முறை சாலையில் உருண்டோடியுள்ளது. பொதுவாக கார்கள் விபத்து ஏற்படும் போது அதில் இருக்கும் ஏர் பேக் உள்ளே இருக்கும் நபர்களை பாதுகாக்கும். இந்த ஏர் பேக் காரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோதினால் மட்டுமே வெளிவரும்.
ஆனால் இந்த டிராக்டரும், டாட்டா டியாகோ காரும் மோதிய விபத்தில் டாட்டா டியாகோ காரில் ஏர் பேக் இருந்தது. ஆனால் காரில் பயணித்த நபர்கள் ஏர் பேக் வெளிவராத நிலையிலும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்தில் டாட்டா டியாகோ கார் நொறுங்காமால் நல்ல உறுதித்தன்மையுடன் தரமானதாக இருந்ததால் காரின் உள்ளே இருந்த நபர்கள் உயிர் தப்பியுள்ளனர். பொதுவாக இதர கார் நிறுவனங்களை ஒப்பிடும்போது டாட்டா நிறுவனங்கள் தரம் உருவாக்கத்தில் (Build Quality) சிறப்பானதாக உள்ளது. தரம் உருவாக்கம் முறையாக இல்லையெனில் விபத்துகளில் கார்கள் மோதும் போது நொறுங்கி விடும்.
டாட்டா வாகனங்களின் விலை இதர வாகனங்களை விட குறைவாகவும், அதன் மைலேஜ் இதர வாகனங்களை விட அதிகமாகவும் உள்ளது. இதனால் கால் டேக்சி மற்றும் டிராவல்ஸ் போன்ற வாகனங்கள் டாட்டா கார்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் மக்கள் டாட்டா கார் என்பது டிராவல்ஸ் வாகனமாக கருதி இதர வாகனங்களை நாடினர். ஆனால் சந்தைகளிலும், மக்களிடமும் டாட்டா கார்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், தற்போது அதன் உறுதித்தன்மையும், பாதுகாப்பையும் கருதி ஏராளமானோர் டாட்டா கார்களை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் டாட்டா கார்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விபத்தால் டாட்டா டியாகோ காரில் பயணித்த நபர்கள் உயிர் பிழைத்துள்ளனர். இதில் பயணித்த ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் "முதலில் நான் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய டாட்டா டியாகோ வாகனம் சமீபத்தில் விபத்தை சந்தித்தது. என்னுடைய கார் டிராக்டருடன் மோதியதில் இரண்டு முறை சுழன்று விழுந்தது. ஆனால் இந்த விபத்தில் எந்த படுகாயமும் இல்லாமல் வீடு திரும்பினேன். இது போன்ற நல்ல பாதுகாப்பான காரை வடிவமைத்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற விபத்துகளால் டாட்டா கார்கள் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. டாட்டா மோட்டார்சின் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 2017 ஏப்ரல் மாதம் முதல் மார்ச் 2018 வரை கிட்டத்தட்ட 1,87,321 யூனிட் கார்கள் விற்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் நான்காவது பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது.
தற்போதுள்ள சூழலில் மக்கள் காரின் வடிவமைப்பையும், அதன் வசதிகளையும் மட்டும் பார்த்து அதனை வாங்குகின்றனர். ஆனால் அதில் பாதுகாப்பு என்பது இருக்குமோ என்று தெரியவில்லை. இதனால் சாலை விபத்துகளில் காரில் பயணித்த அனைவரும் பலியாகும் நிலை ஏற்படுகிறது. கார் நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பையும், உறுதித்தன்மையும் கருதி வடிவமைக்க பட்டால் சாலை விபத்தில் நேரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.