மஹாராஷ்டிரா இரசாயன தொழிற்சாலையில் தீ மூன்று பேர் உயிரிழப்பு
கோகுல் சரவணன் (Author) Published Date : Mar 09, 2018 09:33 ISTஇந்தியா
மஹாராஷ்டிராவில் உள்ள பால்கார் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மும்பையிலிருந்து 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள பால்கார் நகரில் பல இரசாயன தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது அதில் ரோமெடியோ கெமிக்கல்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதை பற்றி பால்காரின் போலீஸ் உயர் அதிகாரி பிரமோத் பவார் கூறுகையில். தீவிபத்திற்க்கான காரனம் இன்னும் அறியப்படவில்லை எனவும் தீ விபத்து தொழிற்சாலைக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வெடித்ததால் ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறினார். மேலும் தீயணைப்புத்துறையினரால் தொழிற்சாலைக்குள் இருந்து 13 தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் அதில் மூன்று தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் கூடிய விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கூறினார். அந்த தொழிற்சாலையின் அருகில் இன்னும் நான்கைந்து தொழிற்சாலைகளுக்கு தீ பரவியுள்ளதால் தீயணைப்புத் துறையினருக்கு தீயை அணைப்பதில் கடினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவத்தைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் நேற்று இரவு பயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். வெடி சத்தம் கேட்டவுடன் நிலா அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே அலறிக்கொடு ஓடிவந்ததாகவும் தெரிவித்தனர்.
போலீஸ் உயரதிகாரி பிரமோத் பவார் வெடி விபத்திற்கான கரணம் அறியப்படவில்லை அனால் வெடி சத்தத்தையும் நிலா அதிர்வையும் 10 கிமீ தூரத்திலுள்ள மக்களும் உணர்ந்துள்ளதாக கூறினார்.