கொரோனா தாக்கம் முடியும் முன்னே சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
புருசோத்தமன் (Author) Published Date : Apr 20, 2020 15:57 ISTஇந்தியா
மத்திய அரசு அறிவிப்பின்படி ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக ஒரு மாத காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
இருபதாம் தேதிக்கு பின், கொரோனா ஹாட் ஸ்பாட் நகரங்களை தவிர மற்ற ஊர்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் சமூக தூரத்தை கடைபிடிப்பது மட்டுமின்றி, முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
இவ்வாறு மக்கள் இயங்க ஆரம்பிப்பதால், சுங்கச்சாவடிகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் தற்பொழுது மிக பெரிய குழப்பம் உருவாகியுள்ளது, புதிதாக வசூலிக்கப்படம் அதிக கட்டணம்.
பொதுவாக ஏப்ரல் மாதம் சுங்கச்சாவடிகள் கட்டணங்களை உயர்த்துவது வாடிக்கை, ஆனால் கொரோனா பாதிப்பு முடியும் முன்னரே இவர்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை ஏற்றியது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
பொருளாதாரம் மிகுந்த மோசமான நிலையில் இருக்கும் போது இவர்கள் உயர்த்தி வசூலிக்கப்படுவதால், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதை தமிழக அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்களுக்கு உதவவேண்டும்.