கோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி
வேலுசாமி (Author) Published Date : Jun 08, 2018 10:44 ISTஇந்தியா
தற்போது இளைஞர்களிடையே உள்ள ஐஏஎஸ் தேர்வு குறித்த பயத்தை போக்க கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் தமிழகம் முழுவதும் 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' என்ற கருத்தரங்கு நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கோயம்பத்தூரிலும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் சார்பில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் என்ற நிகழ்ச்சியினை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியானது வரும் 10ஆம் தேதி கோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறுகையில் "வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவ இந்தியா எஸ்என்ஆர் ஆடிட்டோரியத்தில் இந்த உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 9 மணிமுதல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்ட கையேட்டினை இலவசமாக வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மரு.க. விஜயகார்த்திகேயன் IAS, பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் பா காயத்ரி கிருஷ்ணன் IAS உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் இதுவரை 159க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 55 க்கும் அதிகமான மாணவர்கள் இந்நிறுவனம் சார்பில் வெற்றடைந்துள்ளனர். இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வரும் ஜூன் 10 மற்றும் 17 ஆம் தேதிகளில் துவங்கவுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 9444227273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.