பீகார் பாரத் பந்தில் வன்முறை வெடித்தது
கோகுல் சரவணன் (Author) Published Date : Apr 10, 2018 12:23 ISTஇந்தியா
இடஒதுக்கீடு முறையை எதிர்த்து இன்று பல மேல்குடி சமூகத்தினர் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று பீகார், உத்தர பிரதேசம், போன்ற முக்கிய மாநிலங்களில் முழு கடையடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாரத் பந்த் அழைக்கப்பட்டதின் எதிரொலியாயை அம்மாநிலங்களின் பல முக்கிய இடங்களில் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 144 தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது. இது குறித்து இந்தியா உள்நாட்டு அமைச்சகம் பாரத் பந்து கடைபிடிக்கப்படும் மாநிலங்களின் அரசுகளுக்கு கலவரங்களை தடுக்கவும் அப்படி மீறி நடந்தால் முழு பொறுப்பும் மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்றும் எச்சரித்திருந்தது.
பல மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தும் இன்று பீகாரின் போஜ்பூர் ஒட்டிய ஆரா என்ற பகுதியில் கலவரம் வெடித்துள்ளது.
இது குறித்து அம்மாநில காவல் உயரதிகாரி கூறியதாவது, இன்று கடைப்பிடிக்கப்பட்ட பாரத் பந்திற்கு பெரிதும் ஆதரவு அளித்தவர்கள் மேல்குடி சமூகத்தினர். திடீரென்று நண்பகல் நேரத்தில் சில உயர்குடி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்களுக்கும் கீழ்குடி சமூக பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்ததாகவும் கூறினார்.
இந்த மோதலில் 15-கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல் உயரதிகாரி தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இக்கலவரம் மேலும் பல பகுதிகளுக்கு பரவமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.