Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான நடிகர்கள்

10வது விஜய் அவார்ட்ஸில் சிறந்த நடிகருக்கான தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுமத்தின் 10வது விஜய் அவார்ட்ஸ் நடக்க உள்ளது. இந்த விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் விருது வழங்கி கவுரவிக்கவுள்ளனர். தற்போது இந்த விழாவில் விருதினை பெறப்போகும் கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விருப்பமான நடிகர் விருதுக்கு அஜித், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட விருதுக்கும் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சிறந்த நடிகருக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் (மெர்சல்), அஜித்குமார் (விவேகம்), பிரபாஸ் (பாகுபலி 2), சூர்யா (சிங்கம் 3) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகர் விருதுக்கு பெறப்போவது நால்வரில் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் மெர்சல் படத்தின் வெற்றியால் விஜய்க்கு இந்த விருது கிடைக்க அதிக அளவு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதில் பிரமாண்ட படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த பிரபாஸும், தல அஜித், சிங்கம் சூர்யா என மூவருமே சிறந்த போட்டியாளர்கள். இதில் யாருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான நடிகர்கள்