Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சினிமா விநியோகத்தில் கால்பதிக்கும் 24 PM ஸ்டுடியோஸ்

24 PM studios handled movie distribution and marketing

 இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' படத்தை தயாரித்த 24 PM ஸ்டுடியோஸ் தற்போது திரைப்படத்தை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இது குறித்து தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா பேசும்போது " திரைப்படத்துறையில் முக்கியமான அம்சம் விநியோகம். எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாத அணுகுமுறையை கொண்டு இந்த படம் விநியோகத்தில் களம் இறங்கியுள்ளோம். இந்த விநியோக பயணத்தை அருள்நிதி நடிப்பில் அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் ' இரவுக்கு ஆயிரம் கண்கள் ' மற்றும் நடிகர் விஷ்ணு, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் 'ராட்சஸன்' போன்ற படங்களோடு தொடங்க இருக்கிறோம்.

மேலும் மரகத நாணயம் படத்தின் மூலம் நல்ல வசூலை பெற்ற தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபுவுடன் இணைந்து இந்த விநியோகத்தை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மரகத நாணயம் படம் போல பல தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் அவருக்கு உள்ளது. விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைக்க முனைப்போடு உள்ளோம்." என்று தெரிவித்துள்ளார். 

சினிமா விநியோகத்தில் கால்பதிக்கும் 24 PM ஸ்டுடியோஸ்