Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்

6 அத்தியாயம் படத்தில் சித்திரம் கொள்ளுதடி என்ற அத்தியாயத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்த த்ரில்லர் படத்தலைப்பு என் பெயர் அனந்தன்

ஆறு இயக்குனர்கள் இணைந்து உருவாக்கி கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் '6 அத்தியாயம்'. இந்த ஆறு அத்தியாயத்தில் 'சித்திரம் கொள்ளுதடி' என்ற அத்தியாயத்தை இயக்கியவர் ஸ்ரீதர் வெங்கடேசன். தற்போது இவர் இயக்கி வரும் அடுத்த பட தலைப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'என் பெயர் ஆனந்தன்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' மற்றும் 'தாயம்' போன்ற படங்களில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்து வருகிறார். இந்த படமும் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பல புது வித முயற்சிகளை கையாண்டுள்ளனர்.

முழு நீள த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் கதை வழக்கமான த்ரில்லராக அல்லாமல் சில உண்மையான சம்பவத்தை வைத்து த்ரில்லராக உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தில் தெருக்கூத்து, நாடகம் போன்ற கலைகள் இடம் பெறவுள்ளது. இந்த படத்தில் புது விதமாக கிளைமேக்ஸுக்கு முன்பாக 12 நிமிடங்கள் அடங்கிய பாடல் இடம் பெறுகிறது.

உணர்வு பூர்வ  பாடலாக உருவாகும் இந்த பாடல் இந்த படத்தின் உயிர் நாடியாகவும் ரசிகர்களுக்கு பல உணர்வுகளை உணர்த்துவதாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாலிவுட் படங்களுக்கு கதை ஆலோசகராக இருந்த மைக் வில்சன் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக அமைத்து வருகிறார்.

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த படத்தை படக்குழு விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை காவ்யா ப்ரொடக்சன் மற்றும் சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணப்பா, சவிதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்ட்ருஸ் படத்தொகுப்பு பணிகளையும், மனோராஜா ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்