Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

2.0 படத்திற்காக லண்டன் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவில் ஏ. ஆர்.ரஹ்மான்

2.0 படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கருடன் லண்டனிலுள்ள சேம்பர் ஆர்கெஸ்டராவில் ரீரெக்கார்டிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

 இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாகவும்  ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும் நடிக்கும்  2.0 படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவு பெற்றன. 75 மில்லியன் டாலர்கள் செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின்  இறுதி கட்ட எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. 

அது மட்டுமின்றி 3டி காமிராக்கள் மூலமாக இந்தியாவில் முதன் முறையாக படமாக்கப்பட்டுள்ள திரைப்படம் இது. நவம்பர் 29 என்று ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுவிட்டது. 

2.0 படத்திற்கான பாடல் பதிவுகள் முடிவு பெற்ற  நிலையில் அதன் பின்னணி இசை கோர்ப்பு மற்றும் ரீரிக்கார்டிங் வேலைகளுக்காக இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் லண்டனில் உள்ள சேம்பர் ஆக்ஸ்ட்ராவில் சில பின்னணி இசை கோர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த சேம்பர்ஆர்கெஸ்டராவில் தான் அவெஞ்சர்ஸ் மற்றும் அயர்ன் மேன் 3 படங்களுக்கான பின்னணி இசை சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 படத்திற்காக லண்டன் சேம்பர் ஆர்கெஸ்ட்ராவில் ஏ. ஆர்.ரஹ்மான்