சங்கரின் 2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Oct 01, 2018 12:31 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் '2.0'. சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010இல் வெளியான 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக '2.0' உருவாகியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஆனால் '2.0' படத்தில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இதனால் இந்த படம் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமா என்ற குழப்பம் இருந்து வந்தது. ஆனால் இந்த படம் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் தான் படக்குழு டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டீசரில் வில்லனான அக்ஷய் குமாரை அழிக்க மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த சிட்டி ரோபோ மீண்டும் உலகத்தை காப்பாற்ற வருகிறது. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் முதல் பாகத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ், எந்திரன் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீண்டும் சங்கர் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட வருடங்களாக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். சுவாரிஷ்யம், சாகசம், டிவிஸ்ட் போன்றவை மட்டும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் போன்றவை நீக்கப்பட்டுள்ளது.