Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சைத்தான் ஸ்டைலில் அண்ணாதுரை 10 நிமிடம் ப்ரோமோ

சைத்தான் ஸ்டைலில் அண்ணாதுரை 10 நிமிடம் ப்ரோமோ

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கென ஒரு வட்டாரத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சைத்தான், எமன் போன்ற அதிரடி படங்களை கொடுத்தார்.    

இதனை அடுத்து அண்ணாதுரை, காளி என இரு படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் எடுக்கபட்டுள்ள அண்ணாதுரை படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்களுக்கிடையில் அதிகளவு எதிர்பார்ப்பினை தந்துள்ளது. பிச்சைக்காரன் படத்தினை போன்று அண்ணாதுரை படத்தினையும் தெலுங்கில் வெளியிடவுள்ளனர். 'இந்திராசேனா' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவரும் இப்படம் தமிழில் வெளியிடப்படும் (நவம்பர் 30ம் தேதி) அதே நாளில் தெலுங்கில் வெளிவரயுள்ளது. 

இந்நிலையில் சைத்தான் படத்தின் இசை வெளியீடு விழாவில் ரசிகர்கள் கவரும் வகையில் அந்த படம் சம்மந்தப்பட்ட காட்சிகள் 10 நிமிடம் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டில் (நவம்பர் 15ம் தேதி) அதே ஸ்டைலை பயன்படுத்த உள்ளனர். இந்த இசை வெளியீட்டு விழா தெலுங்கு திரையுலகிலும் நடைபெற உள்ளது.

சைத்தான் படத்தினை போன்று அண்ணாதுரை படத்தின் சில காட்சிகள் 10 நிமிடம் திரையிடப்படவுள்ளது. இந்த மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

    

சைத்தான் ஸ்டைலில் அண்ணாதுரை 10 நிமிடம் ப்ரோமோ