Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தெலுங்கில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்

தெலுங்கில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து பேஜோய் நம்பியார் இயக்கத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிழும் வெளிவந்த 'சோலோ' படத்தில் நாயகனாக புது வித தோற்றத்தில் நடித்து எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெற்றிருந்தது.  

இந்நிலையில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கி தமிழ், தெலுங்கு என மொழிகளில் தயாராகி வரும் 'மகாநதி' படத்தில் துல்கர் ஜெமினி கணேஷன் வேடத்தில் நடித்து வருகிறார்.  

இதனை தொடர்ந்து 2015ல் துல்கர் சல்மான், சாய்பல்லவி நடிப்பில் மலையத்தில் வெளிவந்த 'காளி' படத்திற்கு நல்ல வரவேற்பினை பெற்றதின் காரணத்தினால் தெலுங்கில் டப்பிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹே பில்லாகடா தலைப்பில் நவம்பர் 17ல் வெளிவர உள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் துல்கர் அறிமுகமாகவுள்ளார். 

ஓ காதல் கண்மணி படத்தினை போன்று காளி படமும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் மலையாளத்தில் ஹிட் அடித்தது போன்று தெலுங்கிலும் மெகா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெலுங்கில் அறிமுகமாகும் துல்கர் சல்மான்