Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுபம் கெர்

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுபம் கெர்

மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், இந்து சமயத்தை சாராத முதல் பிரதமர் ஆவார். 1991-1996 வரை பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார். சிறந்த பொருளாதார வல்லுனரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் இவர் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் இருந்தவர். இவருக்கு கடந்த செப்டம்பர் 26-இல் இவருடைய 85-வது பிறந்த நாள் இவருக்கு பல தரப்பினரிடையே பாராட்டுக்கள் கிடைத்தது.

மேலும் 2014-இல் "தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகம் வெளிவந்தது. இது குறித்து "தன்னை சஞ்சயா பாரு முதுகில் குத்திவிட்டார்" என்று கருத்து பதிவிட்டிருந்தார். தற்போது இந்த புத்தகத்தின் தலைப்பில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறுகளை படமாக்க தொடங்கியுள்ளனர். இந்த புத்தகத்தின் தலைப்பையே  படத்தின் பெயராக வைத்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார். இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடிகர் அனுபம் கெர் நடிக்கவுள்ளார்.

நடிகர் அனுபம் கெர் அவர்கள் 'பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' -இன்  சேர்மன் ஆவார். மேலும் இவர் இந்தியில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான சர்வதேச படங்களில் நடித்துள்ளார். இவர் 2004-இல் பத்ம ஸ்ரீ விருதையும், 2014-இல் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுபம் கெர்