Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

குலேபகாவலி படத்தின் ஹார்ட்டுக்குள்ளே பாடல் - வீடியோ

gulebakavali movie heartukulla video song

இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலுக்கு ஜனவரி 12-இல் வெளிவரவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

மேலும் இந்த படத்தில் இடம் பெறும் 'குலேபா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலை 'ஹார்ட்டுக்குள்ளே' என தொடங்கும் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும் ஹிந்தியில் காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார்.

குலேபகாவலி படத்தின் ஹார்ட்டுக்குள்ளே பாடல் - வீடியோ