மலலாவின் வாழ்க்கை வரலாற்று படமான குல்மகை
வேலுசாமி (Author) Published Date : Jan 19, 2018 18:16 ISTபொழுதுபோக்கு
மலாலா யோசப்சையி என்பவர் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கான தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் விதித்த தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவர் பிபிசி உருது (BBC Urdu) எனப்படும் ரேடியோ இணையதளத்தில் தானும் தனது ஊரும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் படும் துயரத்தை விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதி வந்ததால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது.
தொலைக்காட்சி வீடியோ ஒன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகளின் இலக்கிற்கும் ஆளானார். மலாலாவை 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ல முயன்றனர். இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானில் முதன் முறையாக இவருக்கு வழங்கப்பட்டது.
மிகவும் சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும். தற்போது இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படியாக கொண்டு தற்போது 'குல்மக்காய்' என்று பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு சில இடங்களில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்தது.
ஆனால் காஷ்மீரில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணாமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது டால் ஏரி, குல்மார்க், சோனா மார்க் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ரெனைசன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆனந்த் குமார் தயாரிக்கும் இந்த படத்தை அம்ஜத் கான் இயக்கி வருகிறார். இந்தியாவின் சீரியல் நடிகையான ரீம் ஷைக் இந்த படத்தில் 20 வயது மலலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.