Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பல பிரபலங்கள் ஒன்றினையும் கெளதம் மேனனின் 'ஒன்றாக'

பல பிரபலங்கள் ஒன்றினையும் கெளதம் மேனனின் 'ஒன்றாக'

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' எடுத்துள்ளார். இப்படத்தினை அடுத்தடுத்து வெளியிட உள்ளனர். இதனை அடுத்து விஜய் மில்டன் இயக்கம் கோலிசோடா 2 படத்தில் கெளதம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனை முடித்த பிறகு அடுத்த ஆண்டில் அந்தந்த மொழிகளின் பிரபலங்களை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என அனைத்து மொழிகளிலும் 'ஒன்றாக' என்னும் தலைப்பில் ஒரு படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.   

இப்படத்தில் பிரித்விராஜ், புனீத் ராஜ்குமார், அனுஷ்கா செட்டி, தமன்னா போன்றவர்கள் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்கயிருப்பதாகவும், புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் நடிப்பதாக தெரிகிறது. முன்னணி நடிகர்களின் ஒருவரான கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் தேசிய விருது பெற்றிருப்பது குறிப்பிட்ட தக்கது. 

தெலுங்கில் சாய் தரன் ராஜ் மற்றும் தமிழில் சிலம்பரசன் நடிப்பதாகவும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி, விஜய் டேவீரக்கொண்டா நடிக்கயிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறாராம்

பல பிரபலங்கள் ஒன்றினையும் கெளதம் மேனனின் 'ஒன்றாக'