பீவி சிந்து வெளியிட்ட மதுரவீரன் 'நெஞ்சிக்குள்ளே' பாடல்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 26, 2017 21:37 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் 'சகாப்தம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வி.ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக நாயகி மீனாட்சி, மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து நடிக்கின்றனர்.
இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை இயக்குனரே மேற்கொண்டுள்ளார். முன்னதாக இந்த படத்தின் சிங்கிள் டிராக்கை நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்டார். இதனை அடுத்து விஜயகாந்த் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்தார். தற்போது இந்த படத்தின் 'நெஞ்சிக்குள்ளே' என தொடங்கும் பாடலை பேட்மிட்டன் வீராங்கனை பீவி சிந்து வெளியிட்டுள்ளார்.