Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா

raghava lawrence new film shooting start from april

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முனி. இந்த படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து ராஜ்கிரண், வினு சக்ரவர்த்தி, கோவை சரளா, காதல் தண்டபாணி, ராகுல் தேவ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய ராகவா லாரன்ஸின் நடிப்பு பெரிதளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதற்கு அடுத்த படியாக காஞ்சனா ( முனி 2 ), காஞ்சனா 1 (முனி 3), மொட்ட சிவா கேட்ட சிவா, சிவலிங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்பொழுது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 3 ( முனி 4) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் ஓவியா நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிட தக்கது. 

இந்த படத்தினை தொடர்ந்து ராகவா மற்றொரு புது படத்தினை இயக்கி நடிக்கவிருப்பதாக கடந்த நாட்களில் தகவல் வெளியானது. மேலும் இப்படத்திற்கு 'காலபைரவா' என்ற தலைப்பினை வைத்திருப்பதாகவும்  லாரன்ஸுக்கு சொந்தமான 'ராகவேந்திரா புரொடக்சன்ஸ்' தயாரிப்பு  நிறுவனத்தின் மூலம் படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவலில் குறிப்பிட்டதை தொடர்ந்து தற்பொழுது வந்த தகவலில்  படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தில் அதிக பொருட்செலவில்  பிரமாண்டமான முறையில் துவங்கவிருப்பதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம்  'கோஸ்ட் ரைடர்' என்ற ஹாலிவுட் படத்தின் சாயலில் உருவாகவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை பற்றிய இன்னும் சில விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

ஏப்ரலில் துவங்கும் ரகவா லாரன்ஸின் காலபைரவா