Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் 'சண்டகோழி 2' படத்தின் வெளியீடு தேதி

sandakozhi 2 release date

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இரும்பு திரை'. இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளனர். தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் வெளியாகிறது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மேலும் இப்படம் ஜனவரி 26 இல் வெளிவரவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஷால் நடிப்பில் தற்பொழுது உருவாக்கி கொண்டிருக்கும் படம் 'சண்டகோழி 2'. இந்த படத்தினை இயக்குனர் லிங்குசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ல் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்படத்தினையும்  விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விஷால் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இவருடன் இணைந்து ராஜ்கிரண், வரலக்ஷ்மி சரத்குமார், சூரி, ஹரிஷ் பாரதி, அப்பணி சரத் உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.         

விஷாலின் 'சண்டகோழி 2' படத்தின் வெளியீடு தேதி