Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தேள் படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் சம்யுக்தா ஹெக்டே

பிரபு தேவாவின் தேள் படத்தில் நாயகியாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகருள் ஒருவராக மாறியுள்ள பிரபு தேவா, 'லக்ஷ்மி' படத்திற்கு பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, தேவி 2, பொன் மாணிக்கவேல், தேள் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதில் நடிகர் மற்றும் நடன ஆசிரியரான ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள 'தேள்' படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதன் பிறகு படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிக்க கன்னட மற்றும் தெலுங்கு நடிகையான சம்யுக்தா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016இல் 'கிரீக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து மற்றொரு நாயகியாக நடிக்க சம்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் பிறகு இவருடைய இரண்டாவது தமிழ் படமாக பிரபு தேவாவின் 'தேள்' உருவாகவுள்ளது.

தேள் படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் சம்யுக்தா ஹெக்டே