Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'செம போதை ஆகாத' படத்தின் ட்ரைலர் இசைவெளியீடு

semma botha agatha movie poster

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'செம போதை ஆகாத'. இந்த படத்தை கிக்கஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் படத்தின் கதாநாயகன் அதர்வா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். மேலும் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ட்ரைலரை நாளை(நவம்பர் 22-இல்)  நடைபெற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நடிகர் அதர்வா தற்போது 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்த', 'ருக்குமணி வண்டி வருது' போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அதர்வா தமிழ் திரையுலகிற்கு 'பாணா காத்தாடி' படம்  மூலம் அறிமுகமானார். இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருந்தார். 'செம போதை ஆகாத' படத்தையும் பத்ரி வெங்கடேஷ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

'செம போதை ஆகாத' படத்தின் ட்ரைலர் இசைவெளியீடு