Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 27இல் வெளியான 'செக்க சிவந்த வானம்' படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள '96' படமும் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

இவர் முன்னதாக விஜய் சேதுபதியின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து '96' படத்தை உருவாக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து வெளியான இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். ஏற்கனவே நயன்தாரா, சமந்தா, திரிஷா போன்ற முன்னணி நாயகிகளிடம் விஜய் சேதுபதி ஜோடி சேர்ந்துள்ள நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்