இந்திய ராணுவ வீரர் சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம்
வேலுசாமி (Author) Published Date : Jan 29, 2018 10:54 ISTபொழுதுபோக்கு
சுபேதார் ஜோகிந்தர் சிங் என்பவர் இந்திய ராணுவத்தின் முன்னாள் படை வீரராவார். இவர் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவத்தின் வீரத்தின் பலத்தை தனி மனிதனாக நிரூபித்து காட்டியவர். இவர் பஞ்சாபில் 1921-ஆம் ஆண்டு மோகா என்ற இடத்தில் பிறந்த இவர், தனது கல்வியை குடும்ப சூழ்நிலை காரணமாக நிறுத்த வேண்டியிருந்தது. பின்னர் ராணுவத்தில் ஆர்வம் காட்டிய இவர் பிரிட்டிஷ் இந்திய காலத்தில் 1936ஆம் ஆண்டு சீக்கிய படை அணியின் முதலாவது படை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் இந்தியாவுக்காக 1947-ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தானி போர், சீனோ-இந்தியா போர், இரண்டாம் உலக போர் போன்ற போர்களில் தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார்.
1962-ஆம் ஆண்டு நடந்த சீனோ-இந்தியா போரின் போது இந்திய சீன எல்லையில் உள்ள பும்லா என்ற இடத்தில் இருந்த படைக்குழுவிற்கு தலைமை தாங்கினார். 21 வீரரை மட்டும் கொண்ட ஜோகிந்தர் சிங் தலைமையிலான சீக்கிய படை கிட்டத்தட்ட 1000 மேற்பட்ட சீன வீரர்களை கொண்ட ராணுவத்தை எதிர்த்து போராடியது. இந்த போராட்டத்தில் படுகாயமடைந்த ஜோகிந்தர் சிங் காயங்களுடன் சீனர்களை எதிர்த்தார். பின்னர் சீனர்களால் சிறைபிடிக்கப்பட்டு இறந்தார். இவருடைய மறைவிற்கு பிறகு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் விர் சக்கரா என்ற விருது கிடைத்தது.
தற்போது இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து அவருடைய பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் மற்றும் பஞ்சாபை சேர்ந்த ஜிப்பி கிரிவேல் ஜோகிந்தர் சிங் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுமர்ஜித் சிங் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.