Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

50 நாட்கள் கன்னடத்தில் கலக்கும் தமிழ்நாட்டின் தல அஜித் படம்

ajith Arrambam kanada movie

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், சாதாரண தோற்றத்தில் இருந்து அனைவரின் மனதினை கவர்ந்தவராக வளம் வரும் தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்த வெற்றி படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து 'விஸ்வாசம்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கி தீபாவளி விருந்தாக வெளிவர உள்ளது.       

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் 'ஆரம்பம்'. இந்த படத்தில் நயன்தாரா, ராணா டகுபதி, ஆர்யா, டாப்ஸி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் திரையுலகில் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்தினை கன்னடத்தில் 'தீரன்' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டு இன்றோடு 50வது நாளை எட்டியுள்ளது. இன்னும் பல திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் '#AJITHsDheeraBB50Days' என்ற டேகை கிரியேட் செய்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.          

50 நாட்கள் கன்னடத்தில் கலக்கும் தமிழ்நாட்டின் தல அஜித் படம்