Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

துப்பறிவாளன் தெலுங்கில் வெளியீடு

துப்பறிவாளன் தெலுங்கில் வெளியீடு

கடந்த மாதத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த விஷாலின் துப்பறிவாளன் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தமிழில் இப்படம் இணையதளத்தில் சில மணி நேரத்தில் வெளிவந்தாலும் ரசிகர்கள் ஆதரவினால் எதிர் பார்த்ததை விட அதிகளவு வெற்றியை தந்தது. விஷால் தயாரித்து  நடித்த இப்படத்தில் அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஜெரேமியா, பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.  

மிஸ்கின் இயக்கத்தில் தெலுங்கில் 'டிடக்டிவ்' என்ற தலைப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் போன்றவை வெளிவந்து தெலுங்கு திரையுலகிலும் அதிரடி ஹிட் அடித்திருந்தது.

இந்நிலையில் தெலுங்கில் டப்பிங் பணிகள் முடிவடைந்து, படத்தினை வெளியிடுவதாக விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. நவம்பர் 10ல் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகை போன்றே இப்படத்தின் வரவேற்புகள் தெலுங்கிலும் அதிகளவு இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.   

 

துப்பறிவாளன் தெலுங்கில் வெளியீடு