Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி

சர்கார் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பினை நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்த படத்தின் பாடல்களை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்ட் ப்ரொடக்சன் போன்ற பணிகள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருவகாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

இதனால் விரைவில் சர்கார் டீசர் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது நடிகை வரலட்சுமி இந்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி 'சர்கார்' படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகை வரலட்சுமி, தன்னுடைய காட்சிகளை தெலுங்கில் டப்பிங் செய்து வருகிறார். ஆனால் விக்ஸ் இல்லாமல் டப்பிங் பணிகளை செய்ய கடினமாக உள்ளதாகவும் அவர் தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தெலுங்கிலும் விஜய் படங்களுக்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் 'சர்கார்' படத்தின் வெளியீட்டிற்காக தெலுங்கு ரசிகர்களும் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி