Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனுஷின் மனதை வருடும் நான் தான் இங்கே விசிறி

Visiri Video Single Enai Noki Paayum Thota

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இறுதிக்கட்ட வேலையில் உள்ள படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'  திரைப்படம். சில காரணங்களால் படம் தாமதமானாலும் இயக்குனர் கௌதம் மேனன், ரசிகர்களை ஏமாற்றாமல் படத்தின் அறிவிப்புகளையும் ஆடியோக்களையும் ரிலீஸ் செய்து படத்தை இறுதிநிலைக்கு கொண்டுவந்துள்ளார் .

இயற்கையான காதலை தெளிவாக சித்தரிப்பதில் இயக்குனர் கௌதம் மேனன் தனி சிறப்பு வாய்ந்தவர், அவருடைய படங்களில் காதலை மையப்படுத்தி எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றன.  இந்த வரிசையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் தனுஷ் நடிப்பில் வருவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் 3வது பாடலை வீடியோவுடன் 2017 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டு ஆர்வத்தை இன்னும் அதிகமாகவே தூண்டியது எனலாம். வளர்ந்து வரும் இசையமைப்பாளர் தர்புக சிவா இசையமைக்க, கவிஞர் தாமரை அவரக்ளின் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சாஷா திருப்பதி இந்த பாடலை அழகாக பாடியுள்ளனர்.

தனுஷின் மனதை வருடும் நான் தான் இங்கே விசிறி