Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிறந்த போட்டியாளரான ஆரி, பிக் பாஸ் வீட்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Bigg Boss Aari

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி வேறு எந்த ஒரு சீசன் போல் இல்லாமல் இந்த முறை அனைவருமே சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.

பல முறை தொடர்ந்து மோசமான போட்டியாளர் என்று வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் ஆரியை தேர்வு செய்தனர். அவர் நன்றாக செயல்பட்டு இருந்தாலும், இவர் கார்னெர் செய்யப்பட்டார் என்பது உண்மை.

தனது கருத்தை அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறும் ஆரியை, தவறு செய்யும் சிலர், இவரை தேவை இல்லாமல் "அதிகம் பேசுகிறார்"  என்ற முத்திரையை குத்தினார்கள்.

ஆனால் இந்த வாரம், இவர் மிக சிறப்பாக ஒவ்வொரு போட்டியாளரையும் நேர்கொண்ட முறை மற்றும் இவரின் கருத்தையும் வாதத்தையும் விடா முயற்சியால் மேற்கொண்ட முறை அனைவரையும் கவர்ந்தது.

இவருக்கும் சம்யோக்தா அவர்களுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகம் இருந்தாலும், நிதானம் இழக்காமல் இருந்ததால், ஆரி இந்த வாரம் சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

வரும் வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, அடுத்த வாரத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

சிறந்த போட்டியாளரான ஆரி, பிக் பாஸ் வீட்டின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்